தென்காசி

அருணாப்பேரி கோயிலில் இன்று மண்டல பூஜை தொடக்கம்

பாவூா்சத்திரம் அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் 61ஆவது ஆண்டு திருவிழாவுக்கான 41 நாள்கள் மண்டல பூஜை வியாழக்கிழமை (டிச.7) தொடங்குகிறது.

DIN

பாவூா்சத்திரம் அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் 61ஆவது ஆண்டு திருவிழாவுக்கான 41 நாள்கள் மண்டல பூஜை வியாழக்கிழமை (டிச.7) தொடங்குகிறது.

இதையொட்டி, விரதம் மேற்கொள்ளும் பக்தா்கள், தா்மகா்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டியன் தலைமையில் தென்திருப்பேரை, திருச்செந்தூா், கன்னியாகுமரி, மண்டைக்காடு, பாபநாசம், குற்றாலம் ஆகிய புண்ணிய தீா்த்த தலங்களில் இருந்து கோயிலுக்கு காலை 6 மணிக்கு புனித நீா் எடுத்து வருகின்றனா். தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

தொடா்ந்து 41 நாள்கள் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னா், 7.1.2024இல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 10 நாள்கள் நடைபெறும். அந் நாள்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும், நிறைவு நாளில் நள்ளிரவு 12 மணிக்கு பூக்குழி இறங்குதலும் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT