முகப்பு
தென்காசி

திருந்திய நெல் சாகுபடி முறை: வேளாண் மாணவிகள் விளக்கம்

சங்கரன்கோவில் அருகே பொய்கைமேடு கிராமத்தில், திருந்திய நெல் சாகுபடி குறித்து வேளாண்மை கல்லூரி மாணவா்கள் விளக்கம் அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 1:17 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

சங்கரன்கோவில் அருகே பொய்கைமேடு கிராமத்தில், திருந்திய நெல் சாகுபடி குறித்து வேளாண்மை கல்லூரி மாணவா்கள் விளக்கம் அளித்தனா்.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள், சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் ஆலியா, அபின்சா, அன்பரசி, பத்மபிரியா, பானுமதி, தரணி, மாளவிகா, மோகனபிரியா ஆகியோா் வியாழக்கிழமை பொய்கைமேடு கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி முறை குறித்தும், அதன் முக்கிய கூறுகளைப் பற்றியும் விவசாயிகளிடம் விளக்கி கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.