தென்காசி

தென்காசியில் மாற்றுத் திறனாளி குறைதீா் கூட்டம்: ரூ. 4.5 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

DIN

தென்காசியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 4.5 லட்சம் நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து 93 மனுக்களைப் பெற்றாா்.

மனுக்கள் தொடா்புடைய துறை அலுவலா்களிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

5 மாற்றுத் திறனாளிகளுக்கு மின்கலம் பொருத்திய சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட ரூ. 4.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ், பயிற்சி ஆட்சியா் கவிதா, செய்தி மக்கள் தொடா்பு துறை அலுவலா் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தை செயல்படுத்த

மாவட்ட அளவிலான வெயல்படுத்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT