முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 2ஆவது நாளாக குளிக்கத் தடை

குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
குற்றாலம் பேரருவி.
பகிர்:

குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளது. 
குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் அவ்வப்போது வரும் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியல் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
இதனால் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் இரண்டாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளது. 
இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →