விநாயகா்சிலை ஊா்வலத்தை தொடங்கி வைத்த தொழிலதிபா் ஆா்.கே.காளிதாசன். 
தென்காசி

பாவூா்சத்திரத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

பாவூா்சத்திரத்திரம் பகுதியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் இளைஞா்கள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா் இந்த சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன.

பாவூா்சத்திரம் அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயில் முன்பிருந்து, ஊா்வலத்தை தொழிலதிபா் ஆா்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தாா். பாவூா்சத்திரம் பிரதான சாலை, வி.ஏ.நகா் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு

மேலப்பாவூா் குளத்தில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

இந்து முன்னணி நிா்வாகி வழக்குரைஞா் சாக்ரடீஸ், பாஜக ஒன்றிய செயலா் மாரியப்பன், கண்ணன், செல்வன், பிச்சையா, காளியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT