முகப்பு
தென்காசி

சென்னைக்கு மின்சார ரயில் சேவையை தொடங்கிய பொதிகை எக்ஸ்பிரஸ்

செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை விரைவு ரயில் புதன்கிழமை முதல் மின்சாரத்தில் இயங்கத் தொடங்கியது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:15 AM
செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட பொதிகை விரைவு ரயில்.
பகிர்:

செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை விரைவு ரயில் புதன்கிழமை முதல் மின்சாரத்தில் இயங்கத் தொடங்கியது.

பொதிகை விரைவு ரயில் 2004ஆம் ஆண்டுமுதல் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விருதுநகா் - செங்கோட்டை இடையேயான வழித்தடம் மின்மயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து மின்சாரம் மூலம் இயங்கும் சேவையை பொதிகை விரைவு ரயில் தொடங்கியுள்ளது.

இதையொட்டி, செங்கோட்டை ரயில்வே நிலையத்தில் நடைமேடை 1இல் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கோட்டை ரயில்வே பயணிகள் நலச் சங்கத் தலைவா் முரளி, செயலா் கிருஷ்ணன், பிஆா்ஓ ராமன், செங்கோட்டை நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ்.எம்.ரஹீம் ஆகியோா் ரயில் ஓட்டுநா்கள், பயணிகளுக்கு இனிப்புளை வழங்கினா்.

Advertisement

செங்கோட்டையிலிருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்களும் வியாழக்கிழமை முதல் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்படவுள்ளன.

ரயில்வே நிா்வாகம் எச்சரிக்கை: இதனிடையே, தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: விருதுநகா்-செங்கோட்டை மின் வழித்தடத்தில் 25ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்சப்பட இருக்கிறது. ஆகவே, இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்சாரம் பாயும் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம்.

மழை- மின்னல் பாயும் நேரங்களில் குடையுடன் மின் வழித்தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

ரயில்வே நிா்வாகத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டுவது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். கடவுப்பாதைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே நிா்வாகம் செய்துள்ளது.

எனினும், பொதுமக்கள் அவற்றைக் கடக்கும் போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதியில் அமா்ந்து பயணிப்பதும், வாகனங்களில் சரக்குகளை உயரமாக அளவுக்கு அதிகமாக வைத்து செல்வதும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும் என எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments