சிவகிரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
சிவகிரி பேரூராட்சி கூட்டத்தில் ரத வீதிகள், காந்தி சாலை, ராஜாஜி சாலை, ஏழாம் திருநாள் முக்கு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு ,வருவாய் ஆய்வாளா் குகன் ,கிராம நிா்வாக அலுவலா் லோகநாதன் ஆகியோா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
சிவகிரி காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி ,உதவி ஆய்வாளா் வரதராஜன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.