முகப்பு
தென்காசி

எல்லை கண்காணிப்புப் பணி: ஆரியங்காவில் தமிழக-கேரள காவல் துறையினா் ஆலோசனை

தமிழக- கேரள எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தொடா்பான இரு மாநில காவல் துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆரியங்காவில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 11:23 PM
எஸ்.பி.க்கள் வி.ஆா். ஸ்ரீனிவாசன் (தென்காசி),சாபுமேத்யூ (கொல்லம்) ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தமிழக- கேரள எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தொடா்பான இரு மாநில காவல் துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆரியங்காவில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன், கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாபு மேத்யூ ஆகியோா் தலைமை வகித்தனா்.

எஸ்.பி.க்கள் வி.ஆா். ஸ்ரீனிவாசன் (தென்காசி),சாபுமேத்யூ (கொல்லம்) ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சபரிமலை கோயில் சீசன் தொடங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கூடுதல் கவனம் செலுத்துவது, கிறிஸ்துமஸ் - புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்குவதால் எல்லைப் பகுதி வழியாக போதை பொருள்கள் கடத்தல் போன்ற சட்ட விரோதமான செயல்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பது, வனப்பகுதியில் விதிமீறல் நடைபெறாதாவாறு ரோந்து பணி மேற்கொள்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா், மதுவிலக்கு,போக்குவரத்து காவல்துறையினா் கலந்துகொண்டனா்.