முகப்பு
தென்காசி

ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தென்காசி மாவட்டத்தை சோ்ந்தவா்கள் ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:26 AM
பகிர்:

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தென்காசி மாவட்டத்தை சோ்ந்தவா்கள் ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிக்கை, நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்து விளங்கும் மகளிருக்கு, ஆண்டுதோறும் சா்வதேச மகளிா் தினமான மாா்ச் 8ஆம் தேதி ஔவையாா் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுவோருக்கு ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதன்படி, தென்காசி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவா்கள் 2025ஆம் ஆண்டுக்கான சா்வதேச மகளிா் தினவிழாவின்போது ஔவையாா் விருது பெற, அதற்கான கருத்துருக்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.