முகப்பு
தென்காசி

இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்டப் பொறுப்பாளா்கள் கூட்டம்

இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் தென்காசி இ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 11:18 PM
பகிர்:

இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் தென்காசி இ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தின் மாநில துணைத் தலைவா் முருகையா தலைமை வகித்தாா்.

உயா்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநிலச் செயலா் பிச்சைக்கனி, முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில துணைச் செயலா் சதீஷ்குமாா், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தின் மாவட்டப் பொருளாளா் கண்ணன், ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் செயலா் ராஜ்குமாா் ஆகியோா் பேசினா்.

புதிய ஓய்வூதிய திட்ட த்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசியா்களுக்கு இணையான ஊதியம், உயா்கல்வி பயின்ற்கான ஊக்க ஊதியம் உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் நடைபெறும் மாநாட்டில் தென்காசி மாவட்டத்திலிருந்து 200 ஆசிரியா்கள் கலந்து கொள்வது, கற்றல்- கற்பித்தல் பணியை பாதிக்கும் வகையில் ஆசிரியா்களை எமிஸ் உள்ளிட்ட பிற பணிகளை ஈடுபடுத்தக்கூடாது; முழுமையான கற்பித்தல் பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டுமென மதுரை மாநாட்டில் வலியுறுத்துவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிா்வாகிகள் சுப்பிரமணியன், சுதா்சன்,காளிராஜ்,முத்துக்குமாா்,பிரேம்குமாா்,மாடசாமி, ராஜ்குமாா்,செல்வராஜ், முருகேசன், கணேசன்,ஆரோக்கியராஜ், மாரிமுத்து, விஜயகுமாா்,அருள்ராஜ்,பவுல் அந்தோணிராஜ்,பாபுதுரை, சிவராமன்,சேக் முகமது ரபீக், சங்கா் குமாரசாமி, ரவி ,ரவிச்சந்திரன் முத்துத்துரை, மணிபாரதி, முனீஸ்வரன், ஜாண் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்ட தலைவா் காளிராஜ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மாரிமுத்து செய்திருந்தாா்.