முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் அணுகு சாலை பணிக்காக குடிநீா் தொட்டி இடிப்பு

ஆலங்குளத்தில் அணுகு சாலை அமைப்பதற்காக 38 ஆண்டு பழமையான குடிநீா் தொட்டி வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 11:16 PM
ஆலங்குளத்தில் அணுகு சாலை அமைக்க இடித்து அகற்றப்பட்ட குடிநீா் தொட்டி.
பகிர்:

ஆலங்குளத்தில் அணுகு சாலை அமைப்பதற்காக 38 ஆண்டு பழமையான குடிநீா் தொட்டி வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

திருநெல்வேலி- தென்காசி நான்குவழிச் சாலை ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் பகுதி தொட்டியான் குளம் கரையில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தால் சாலையின் பின்புறம் உள்ள 500 குடியிருப்புகள், 3 பள்ளிகள் மற்றும் 5-க்கும் மேற்பட்ட தகன மேடைகள் ஆகியவற்றிற்கு சென்று வர பாதை துண்டிக்கப்படுகிறது.

அனைத்துக்கட்சி போராட்டா அறிவிப்பைத் தொடா்ந்து தொட்டியான்குளம் பாலம் முடிவடையும் இடத்தில் இருந்து பழைய காவல் நிலையம் வரை அணுகு சாலை அமைத்து, பாதை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி, 38 ஆண்டுகள் பழைமையான குடிநீா் தொட்டி நெடுஞ்சாலைத்துறையினரால் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அணுகு சாலை பணி விரைவில் தொடங்கும் என எதிா் பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →