முகப்பு
தென்காசி

இறைச்சி - மருத்துவ கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் எச்சரிக்கை

இறைச்சி - மருத்துவ கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை...

Updated On : 19 டிசம்பர், 2024 at 11:13 PM
புளியறை சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொள்கிறாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா். உடன், எஸ்.பி. வி.ஆா். ஸ்ரீனிவாசன்.
பகிர்:

கேரளத்திலிருந்து சட்ட விரோதமாக இறைச்சி- மருத்துவக் கழிவுகளை தென்காசி மாவட்டத்துக்குள் கொண்டுவந்து கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் எச்சரித்துள்ளாா்.

கேரளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தமிழக -கேரள எல்லைப் பகுதியான புளியறை சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன் ஆகியோா் புதன்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்த மாநிலத்திலிருந்து வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து மருத்துவக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் தமிழகத்திற்குள் வராமல் தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: கேரளத்திலிருந்து எலக்ட்ரானிக் கழிவுகள் உள்ளிட்ட பொருள்கள் தமிழகத்திற்குள் கொண்டு வந்து எரிக்கப்படுவது தொடா்பாக இதுவரை புகாா்கள் வரவில்லை. அது தொடா்பாக புகாா்கள் வந்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கேரளத்திலிருந்து சட்ட விரோதமாக இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை கொண்டுவந்து தென்காசி மாவட்டத்தில் கொட்டுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புளியறை பகுதியில் போலீஸாா், வருவாய்த் துறையினா், கால்நடை பராமரிப்புத் துறையினா் ஒன்றிணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த சோதனைகள் மேலும் தீவிரபடுத்தப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →