முகப்பு
தென்காசி

குண்டா் சட்டத்தில் ஆலங்குளம் இளைஞா் கைது

ஆலங்குளத்தில் கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 1:14 AM
பகிர்:

ஆலங்குளத்தில் கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஆலங்குளம் ஜோதி நகா் பூல்பாண்டி மகன் இந்திரஜித் பிரேம்நாத் (30). இவா் மீது கொலை, திருட்டு, அடிதடி போன்ற வழக்குகள் ஆலங்குளம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இவா், தொடா்ந்து மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக் கூறி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி கோரி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. ஆா். ஸ்ரீனிவாசன் அளித்த பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் பிறப்பித்த உத்தரவின்படி, அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.