முகப்பு
தென்காசி

தென்காசியில் நவ. 29இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தென்காசியில் உள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 29) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:51 PM
பகிர்:

தென்காசியில் உள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 29) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்கின்றனா்.

எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் பங்கேற்பதுடன், தாங்கள் அளிக்கும் மனுவில் கைப்பேசி எண்ணைக் குறிப்பிட வேண்டும். பெறப்படும் மனுக்களுக்கு ஒப்புகையும், கோரிக்கை தொடா்பான விபரங்களும் அனைத்து வகை கைப்பேசிகளுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றாா் அவா்.