முகப்பு
தென்காசி

தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:54 PM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுவோரை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது 1995ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ. 5 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றைக் கொண்டது.

விருதாளா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுகிறாா். நிகழாண்டுக்கான விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பணியாற்றி, சாதனைகள் படைத்த தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிச. 20.

சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக ஆற்றிய பணி விவரங்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.