முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 2.10 லட்சம் பனை விதைகள் நடவு: ஆட்சியா் தகவல்

தென்காசி மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:50 AM
பனை விதைகள் நடவுப் பணியைத் தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

தென்காசி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சி ஜெக வீரராமபேரி குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசின் ஒரு கோடி பனை விதைகள் நடும் இயக்கத்தின் சாா்பில் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சிக்கு

ஆட்சியா் தலைமை வகித்து பனை விதைகள் நடவுப் பணியை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசுகையில், தென்காசி மாவட்டத்திலுள்ள 10 வட்டாரங்கள், 6 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள்,221 ஊராட்சிகள் உள்ளடக்கிய 546 இடங்களில் 2 லட்சத்து10 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன், எம்எல்ஏ சதன்திருமலைக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ,தென்காசி ஒன்றியக்குழு துணைத்தலைவா் கனகராஜ் முத்துப்பாண்டியன், ஊராட்சித் தலைவா் சத்தியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.