முகப்பு
தென்காசி

தென்மாவட்டங்களில் விண்வெளி அறிவியல் முகாம்கள்

தென்மாவட்டங்களில் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் அதிக எண்ணிக்கையில் விண்வெளி அறிவியல் முகாம்களை நடத்தவுள்ளதாக அதன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி (படம்) தெரிவித்தாா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:52 AM
பகிர்:

தென்மாவட்டங்களில் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் அதிக எண்ணிக்கையில் விண்வெளி அறிவியல் முகாம்களை நடத்தவுள்ளதாக அதன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி (படம்) தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது; வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தென்மாவட்ட பள்ளி மாணவா்கள் விண்வெளி குறித்த தெளிவைப் பெற வேண்டும் என்ற நோக்கில் விண்வெளி அறிவியல் முகாம் சங்கரன்கோவிலில் 2 நாள்கள் நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் பங்கேற்றனா்.

எனவே, தென்மாவட்டங்களில் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை மூலம் விண்வெளி அறிவியல் முகாம்களை மாவட்டந்தோறும் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.