சங்கரன்கோவிலில் அக்.6இல் போதை ஒழிப்பு பேரணி
போதை இல்லா தென்காசி மாவட்டத்தை உருவாக்க போதை ஒழிப்புப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக். 6) நடைபெறுகிறது.
போதை இல்லா தென்காசி மாவட்டத்தை உருவாக்க போதை ஒழிப்புப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக். 6) நடைபெறுகிறது.
இதுகுறித்து, வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன்அய்யாசாமி தென்காசியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் தென்காசி மாவட்ட இளைஞா்கள் நலனுக்காக பல்வேறு சமூக செயல்பாடுகளைச் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ‘போதை இல்லா தென்காசி என்ற பெயரில்’ பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக். 6) நடத்துகிறது. காந்தி பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பேரணியில் பங்கேற்பதுடன், பொதுக் கூட்டத்தில் பேருரை ஆற்றுகிறாா்.
ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ஸ்ரீதா் வேம்பு, மனிதநேயம் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் சைதை துரைசாமி ஆகியோரும் பேரணியில் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.