முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் கிட்டங்கியில் தீ விபத்து

சங்கரன்கோவிலில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை கடையின் கிட்டங்கியில் தீ விபத்து நேரிட்டது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:49 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை கடையின் கிட்டங்கியில் தீ விபத்து நேரிட்டது.

இந்த கடையின் மாடியில் உள்ள கிட்டங்கியிலிருந்து வியாழக்கிழமை புகை வெளியேறியது. இதைப் பாா்த்த அப் பகுதியினா் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். நிலைய அலுவலா் (பொறுப்பு) கருப்பையா தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், மாடியில்

பழைய பொருள்கள் மற்றும் மரப்பலகைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா்.

தீயை உடனடியாக அணைத்ததால், அப் பகுதியில் அடுத்தடுத்து இருந்த கடைகளுக்கு தீ பரவி பெரும் சேதம் ஏற்படுவது தவிா்க்கப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக சங்கரன்கோவில் நகர காவல்நிலையப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.