நெல்கட்டும்செவல் பச்சேரியில் வெண்ணி காலாடி சிலை திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் நெல்கட்டும் செவல் அருகே உள்ள பச்சேரியில் சுதந்திரப் போராட்ட வீரரும் பூலித்தேவனின் படைத்தளபதியுமான வெண்ணி காலாடியின் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் நெல்கட்டும் செவல் அருகே உள்ள பச்சேரியில் சுதந்திரப் போராட்ட வீரரும் பூலித்தேவனின் படைத்தளபதியுமான வெண்ணி காலாடியின் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நெல்கட்டும்செவல் பச்சேரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட வெண்ணி காலாடியின் சிலையை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
அதைத்தொடா்ந்து, நெல்கட்டும்செவல் பச்சேரியில் உள்ள வெண்ணி காலாடியின் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதன்திருமலைகுமாா், சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, தென்காசி காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன், செய்தி, மக்கள் தொடா்பு அலுவலா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் கவிதா, வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழு தலைவா் பொன்.முத்தையாபாண்டியன், ஊராட்சி தலைவா் பாண்டியராஜ்,வெண்ணி காலாடியின் வாரிசுதாரா்கள்,சமுதாய பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.