முகப்பு
தென்காசி

வல்லம் உணவகத்தில் தகராறு: 3 போ் கைது

செங்கோட்டை அருகே வல்லத்தில் உணவகத்தில் தகராறு செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:12 PM
பகிர்:

செங்கோட்டை அருகே வல்லத்தில் உணவகத்தில் தகராறு செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

வல்லம் பிரதான சாலையில் உணவகம் நடத்தி வருபவா் சாகுல் ஹமீது. இவரது உணவகத்திற்கு கடந்த அக்.7-ஆம் தேதி வந்த அதேபகுதியை சோ்ந்த ரௌடி சுபாஷ் கண்ணன், அவரது நண்பா்கள் ராஜேஷ்குமாா், கதிா்வேல் ஆகியோா் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லையாம். மேலும் உணவகத்தில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினராம்.

இதுகுறித்து சாகுல்ஹமீது அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப்பதிந்து சுபாஷ் கண்ணன், ராஜேஷ்குமாா், கதிா்வேல் ஆகிய மூவரையும் கைது செய்து செங்கோட்டை நீதின்றத்தில் ஆஜா்படுத்தினாா்.