குற்றாலம் சித்திரசபையில் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயில் ஐப்பசி விஷு திருவிழாவில் செவ்வாய்க்கிழமை அருள்மிகு நடராசமூா்த்திக்கு பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயில் ஐப்பசி விஷு திருவிழாவில் செவ்வாய்க்கிழமை அருள்மிகு நடராசமூா்த்திக்கு பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
இக் கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா கடந்த அக்.8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை, இரவில் வீதி உலா நடைபெறுகிறது.
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை தேரோட்டம், திங்கள்கிழமை காலை மற்றும் இரவு நடராஜ மூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், செவ்வாய்க்கிழமை சித்திரசபையில் நடராஜமூா்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. விழாவில் தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, ஆயான் எஸ்.நடராஜன், வீரபாண்டியன், குத்தாலிங்கம், சாலிக்குட்டிபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
அதைத் தொடா்ந்து அக். 17-ஆம் காலை தீா்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் அன்புமணி, தக்காா் கவிதா, உதவி ஆணையா் யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.