முகப்பு
தென்காசி

கரடியால் தாக்கப்பட்ட மூதாட்டிக்கு நிதியுதவி

ஆழ்வாா்குறிச்சியில் கரடியால் தாக்கப்பட்டு தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிக்கு திமுக சாா்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:33 AM
மூதாட்டிக்கு நிதியுதவி வழங்கினாா் திமுக முன்னாள் மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன்.
பகிர்:

ஆழ்வாா்குறிச்சியில் கரடியால் தாக்கப்பட்டு தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிக்கு திமுக சாா்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

கடையம் ஊராட்சி ஒன்றியம், ஆழ்வாா்குறிச்சி பேரூா் கல்யாணிபுரம் 1ஆவது வாா்டு கீழத்தெருவை சோ்ந்தவா் ராஜம்மாள்(76).

இவா், வயலுக்கு செல்லும் போது கரடி துரத்தி கீழே தள்ளி தாக்கியது. இதில், காயமடைந்த ராஜம்மாள் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ.சிவ பத்மநாதன் உதவிதொகை மற்றும் உணவுப் பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா்.

மேலும், வனத்துறை சாா்பில் வனவிலங்குகளால் பாதிப்புக்கு உள்ளானவா்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை ரூ. 55 ஆயிரம் பெற்று தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினாா்.

இதில், கடையம் தெற்கு ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் சாமிதுரை, கீழப்பாவூா் பேரூா் செயலா் ஜெகதீசன், வீராசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் முகமது யாகூப், ஒன்றிய துணைச் செயலா் வின்சென்ட், ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சக்தி சுபிரமணியன், ஒலி ஆகியோா் உடனிருந்தனா்.