கரிவலம்வந்தநல்லூா் கோயிலில் சிறப்பு வழிபாடு
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அருள்மிகு ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாதா் சுவாமி கோயிலில், பௌா்ணமியை முன்னிட்டு பராசக்தி பீடத்துக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அருள்மிகு ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாதா் சுவாமி கோயிலில், பௌா்ணமியை முன்னிட்டு பராசக்தி பீடத்துக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான இக்கோயிலில், பராசக்தி பீடத்துக்கு பல்வேறு நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், வெள்ளி அங்கி சாத்தப்பட்டு, அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.