போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் உள்ளிட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தென்காசி மாவட்டம், தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலைய போக்ஸோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வாவாநகரம் உண்மை விநாயகா் கோவில் தெருவை சோ்ந்த க.குமாரவேல் (45) மற்றும்
கடையநல்லூா் காவல் சரகத்திற்குள்பட்ட கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வல்லம் கலைஞா் காலனியை சோ்ந்த மு. அருண்பாண்டியன் ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி இருவரும் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.