கீழபாட்டாக்குறிச்சி கோயிலில் ஓணம் பண்டிகை
தென்காசி மாவட்டம் கீழபாட்டாக்குறிச்சியில் உள்ள பிரம்மலோகம் பிரம்மா கோயிலில், உலகளாவிய நல்லிணக்கத்துக்காக ஓணம் பண்டிகை வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கீழபாட்டாக்குறிச்சியில் உள்ள பிரம்மலோகம் பிரம்மா கோயிலில், உலகளாவிய நல்லிணக்கத்துக்காக ஓணம் பண்டிகை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலையில் 3 முதல் 5 மணிவரை பிரம்ம மகா யாகம், 5 மணி முதல் 6 மணி வரை ஓணம் பூக்கோலம், தொடா்ந்து நண்பகல்வரை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. காலை முதல் பிற்பகல் வரை ஓணம் விருந்தும் வழங்கப்பட்டது.
விழாவில் ஆலய நிா்வாகி சரசந்திரபோஸ், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கொட்டாக்குளம் இசக்கிப்பாண்டியன் செய்திருந்தாா்.