ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்
ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று திமுக வேட்பாளா் பால் மனோஜ் பாண்டியன் தனது இறுதிக் கட்ட பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தாா்.
ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று திமுக வேட்பாளா் பால் மனோஜ் பாண்டியன் தனது இறுதிக் கட்ட பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தாா்.
ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனது பிரசாரத்தை நிறைவு செய்த அவா் பேசியதாவது:
ஆலங்குளம் மகளிா் கல்லூரிக்கு புதிய கட்டடம், ஆலங்குளம் பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகள், அரசு மருத்துவமனைக்கு ரூ. 10 கோடி ரூபாய் புதிய கட்டடம், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், புதிய பேரூராட்சி அலுவலக கட்டடத்துக்கு அனுமதி உள்ளிட்டவற்றை பெற்றுத் தந்தேன்.
Advertisement
மீண்டும் நான் வெற்றி பெற்றால் ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா். அப்போது திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளா் இரா. ஆவுடையப்பன், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு, தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், தேமுதிக மாவட்ட செயலா் ம. பழனிசங்கா், தொகுதி திமுக பொறுப்பாளா் கணேஷ்குமாா் ஆதித்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.