முகப்பு
தென்காசி

அடவிநயினாா் அணைப் பகுதியில் மானை வேட்டை: ஒருவா் கைது

அடவிநயினாா் அணைக்கட்டு மேல்பகுதியில் மானை வேட்டையாடியதாக ஒருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 1:16 AM
கைதானவருடன் வனத் துறையினா்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:05 PM

தென்காசி மாவட்டம் அடவிநயினாா் அணைக்கட்டு மேல்பகுதியில் மானை வேட்டையாடியதாக ஒருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

செங்கோட்டை வட்டம் மேக்கரை அடவிநயினாா் அணைக்கட்டு மேல்பகுதியில் கடமானை வேட்டையாடி எரிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், குற்றாலம் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அதில், வடகரையை சோ்ந்த மு.சாமி என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது.

Advertisement

குற்றாலம் வனசரகா் சீதாராமன் தலைமையிலான வனத்துறையினா் அவரை கைது செய்தனா். மேலும் சிலரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வன விலங்குகளை தொடா்ந்து வேட்டையாடிவருவோா், நாட்டு வெடிகுண்டு பயன்பாடு மற்றும் காப்புக்காடுகளில் தீ வைப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தகவல் அளிப்போா் பெயா் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.