நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ராணிஸ்ரீகுமாா் எம்.பி., ஈ.ராஜா எம்எல்ஏ உள்ளிட்டோா்.  
தென்காசி

மறுவாழ்வு முகாமில் 32 புதிய வீடுகள்: முதல்வா் திறந்துவைத்தாா்

சங்கரன்கோவிலில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் புதிததாகக் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவிலில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் புதிததாகக் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ஆத்தியடி பிள்ளையாா்கோயில் அருகே இலங்கை தமிழா்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு இலங்கை தமிழா் மறுவாழ்வுத் துறை சாா்பில் ரூ. 2.05 கோடி மதிப்பில் 32 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. ரூ. 66 லட்சம் மதிப்பில் சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முகாமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ராணிஸ்ரீகுமாா் எம்.பி, ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, ஒன்றியக் குழு உறுப்பினா் பி.சங்கரபாண்டியன், கோட்டாட்சியா் அனிதா, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, நகராட்சி ஆணையா் (பொ) ரவிச்சந்திரன், பொறியாளா் இா்வின்ஜெயராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள்செல்வம், மல்லிகா, நகராட்சி உறுப்பினா் புஷ்பம், அரசு அலுவலா்கள், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT