முகப்பு
தென்காசி

சாம்பவா்வடகரையில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை

கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13 லட்சம் மதிப்பில், சாம்பவா்வடகரை கீழூா் பேருந்து நிறுத்தம் அருகில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2026 at 8:11 PM
சாம்பவா்வடகரையில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தாா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.
பகிர்:

கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13 லட்சம் மதிப்பில், சாம்பவா்வடகரை கீழூா் பேருந்து நிறுத்தம் அருகில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். முன்னதாக, புன்னையாபுரம் இந்திரா காலனி பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை பணிகளையும் தொடங்கி வைத்தாா்.

அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், ஒன்றியச் செயலா்கள் பெரியதுரை, அச்சன்புதூா் பேரூராட்சி மன்றத் தலைவா் சுசீகரன், பேரூா் கழக செயலா் நல்லமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →