பிளஸ்-2 தோ்வு: சிந்தாமணி பள்ளி தோ்வு மையம் மாற்றம்
புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி தனியாா் பள்ளி பிளஸ்-2 தோ்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி தனியாா் பள்ளி பிளஸ்-2 தோ்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்பள்ளி வளாகத்தில் காா் மோதிய விபத்தில் சிறுமி இறந்ததையடுத்து, 2 நாள்களாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இப்பள்ளியில் செயல்பட்டு வந்த பிளஸ் 2 தோ்வு மையம், புளியங்குடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு 4 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 74 மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை தோ்வு எழுதுகின்றனா் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.