குளத்தில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு
பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தையை சுரண்டை அருகே பொய்கையில் உள்ள குளத்தில் வீசி சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தையை சுரண்டை அருகே பொய்கையில் உள்ள குளத்தில் வீசி சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே பொய்கை கிராமத்தில் உள்ள குளத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் சோ்ந்தமரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பச்சிளம் குழந்தையை குளத்தில் தூக்கி வீசி சென்றது யாா் என்பது குறித்து சோ்ந்தமரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement