திருநெல்வேலி

வலு தூக்கும் போட்டி: நெல்லை வீரர் சாதனை

தேசிய வலு தூக்கும் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த அஞ்சலக ஊழியர் 2 ஆவது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தினமணி

தேசிய வலு தூக்கும் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த அஞ்சலக ஊழியர் 2 ஆவது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தேசிய அளவில் அஞ்சலக அணிகளுக்கு இடையிலான பளு தூக்குதல், வலு தூக்குதல், ஆணழகன் போட்டிகள் கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்றன. இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த அஞ்சலக வீரர் பா. இசக்கிமுத்து என்ற வினோத் 120 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று ஸ்குவாட் முறையில் 300 கிலோ, பெஞ்ச் பிரஸ் முறையில் 150 கிலோ, டெட் லிப்ட் முறையில் 270 கிலோ உள்பட 720 கிலோ எடையினை தூக்கி வெள்ளிப் பதக்கமும், பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

வெற்றி பெற்ற வீரருக்கு திருநெல்வேலி மாவட்ட வலு தூக்கும் சங்கத் துணைச் செயலர் பி. சுரேஷ், பயிற்சியாளர் கி. மாரிக்கண்ணு, கோதர் மைதீன், சிவராமலிங்கம் ரவி, ஆணழகன் சங்கத் துணைத் தலைவர் முத்துபாண்டியன், செயலர் நாராயணன், மாவட்ட வலு தூக்கும் சங்கச் செயலர் உதயகுமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT