தாமிரவருணி பாசனத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரம்
தாமிரவருணிப் பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாற்றுப் பாவுதல், நடுதல் போன்ற பணிகள் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தாமிரவருணிப் பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாற்றுப் பாவுதல், நடுதல் போன்ற பணிகள் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தாமிரவருணிப் பாசனத்தில் கார், பிசானம் ஆகிய இரு பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்குப் பருவத்தில் பிசானப் பருவமும், தென்மேற்கு பருவத்தில் கார் பருவமும் சாகுபடி செய்யப்படுவதுண்டு.
முந்தையை தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய இரு பருவத்தில் போதிய மழை பெய்யாததால் இப்பாசனத்தில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதை அடுத்து பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. உழுதல், நாற்று பாவுதல், நடுவு போன்ற பணிகள் தொடங்கியுள்ளன.
இப்பாசனகத்தில் இருபோகம் சாகுபடி செய்த நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
நிகழ் பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து அக். 5 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து இவ்விரு மாவட்டத்தில் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, கடையம், முக்கூடல், வீரவநல்லூர், சேரன்மகாதேவி,
காருக்குறிச்சி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், பிரான்சேரி, தருவை மற்றும் பாளையங்கோட்டை வட்டாரத்திலும் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கொடுமுடியாறு, கருப்பாநதி, கடனாநதி, ராமநதி, அடவிநயினார் ஆகிய அணைகளில் இருந்தும் பிசான சாகுபடிக்கு புதன்கிழமை தண்ணீர் திறக்கப் பட்டதால் முழு அளவில் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
பாசனத்துக்கு தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.