திருநெல்வேலி

ஒண்டிவீரனுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் நாளை நெல்லை வருகை

DIN

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி பாளையங்கோட்டையில் அவருடைய மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்துகிறார்.
இது தொடர்பாக அமமுகவின் மாநகர் மாவட்டச் செயலர் கல்லூர் இ.வேலாயுதம் வெளியிட்டுள்ள அறிக்கை: 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன், பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அன்றைய தினம் காலை 11 மணிக்கு ரஹ்மத் நகர் அருகேயுள்ள நான்கு வழிச்சாலையில் டிடிவி தினகரனுக்கு மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 11.15 மணிக்கு பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி முன்பு கட்சியின் வழக்குரைஞர் அணி மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் அணி சார்பில் தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒண்டிவீரனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் தினகரன். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல்

உ.பி.: அகிலேஷ், மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலை!

சந்திரபாபு நாயுடுவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

நவீன், நிதீஷ், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!

சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT