தள்ளுவண்டி டயர் வெடித்து தொழிலாளி சாவு
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தள்ளுவண்டிக்கு ஞாயிற்றுக்கிழமை டயர் பஞ்சர் ஒட்டியபோது, டியூப் வெடித்ததில் தொழிலாளி இறந்தார்.
திருநெல்வேலிதள்ளுவண்டி டயர் வெடித்து தொழிலாளி சாவு
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தள்ளுவண்டிக்கு ஞாயிற்றுக்கிழமை டயர் பஞ்சர் ஒட்டியபோது, டியூப் வெடித்ததில் தொழிலாளி இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தள்ளுவண்டிக்கு ஞாயிற்றுக்கிழமை டயர் பஞ்சர் ஒட்டியபோது, டியூப் வெடித்ததில் தொழிலாளி இறந்தார்.
பணகுடி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா(63). இவர், தள்ளுவண்டி மூலம் பாரம் ஏற்றும் தொழில் செய்து வந்தார். இவரது தள்ளுவண்டியில் ஒருபக்கம் டயர் பஞ்சராகியிருந்தது. இதனை சரிசெய்ய பணகுடி மீன்சந்தை அருகேயுள்ள கடையில் கொடுத்துவிட்டு பஞ்சர் ஒட்டுவதை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது, டயரிலுள்ள டியூப் திடீரென வெடித்தது. இதில், டியூப்பின் ஒருபகுதி கருப்பையாவின் தலையில் பலமாக தாக்கியதாம். இதில் மயக்கமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார். இது தொடர்பாக பணகுடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.