முகப்பு
திருநெல்வேலி

கல்பனா சாவ்லா விருது: ஜூன் 20க்குள் வீர, தீர மகளிர் விண்ணப்பிக்கலாம்

வீர, தீரச் செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

வீர, தீரச் செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படவுள்ள 2018 ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதில், சுயவிவரம், புகைப்படம், பத்திகைச் செய்தி, சான்றிதழ்கள், வீர-தீர சாதனைகள் பற்றிய விவரங்கள் ஆகியவை 3 ஸ்பைரல் பைண்டிங் நகல்களாக இடம்பெற வேண்டும். விண்ணப்பத்தை ர.வீரபத்ரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், பாளையங்கோட்டை அணணா விளையாட்டரங்கம், திருநெல்வேலி என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் மூலமோ ஜூன் 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0462-2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ர.வீ.வீரபத்ரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →