முகப்பு
திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து முதியவர் சாவு

சுத்தமல்லி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

சுத்தமல்லி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
சுத்தமல்லி அருகேயுள்ள பழவூரைச் சேர்ந்தவர் ஆணைக்குட்டி (60). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லூரில் தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பழவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, குறுக்கே பெண் ஒருவர் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், வாகனத்தை நிறுத்த முயன்ற ஆணைக்குட்டி எதிர்பாராமல் கீழே தவறி விழுந்து காயமடைந்தார்.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் விசாரிக்கின்றனர்.
நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற தொழிலாளி சாவு
திருநெல்வேலி, ஜூன் 4: கரிவலம்வந்தநல்லூர் அருகே விபத்தில் காயமடைந்தவர், திருநெல்வேலி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள பெரியகோவிலான் குளத்தைச் சேர்ந்த சாத்தப்பன் மகன் மாடசாமி (38). தொழிலாளியான இவர், சில நாள்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →