முகப்பு
திருநெல்வேலி

மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய அறிவியல் தின விழா

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய அறிவியல் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய அறிவியல் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
பாரத ஸ்டேட் வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் சுரேஷ் வக்கீல் தலைமை வகித்தார். மாவட்ட அறிவியல் அலுவலர் நவராம்குமார் வரவேற்றார். மாவட்ட அறிவியல் மைய கல்வி உதவி அலுவலர் மாரிலெனின்அறிமுக உரையாற்றினார். கிருஷ்ணாபுரத்தில் உள்ள பூமத்திய புவி இயற்பியல் ஆராய்ச்சி மைய பேராசிரியர் முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறிவியல் குறித்துப் பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட அறிவியல் மைய கல்வி உதவி அலுவலர் பொன்னரசன் நன்றி கூறினார்.
முன்னதாக  பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்ற மனித சங்கிலி, மாறுவேடப் போட்டி, அறிவியல் தொடர்பான பல்வேறு வாசகங்களை மாணவர்கள் கூறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்துல் கலாம் போன்று வேடமணிந்து வ ந்திருந்த மாணவர்கள், பிஎஸ்எல்வி ராக்கெட்டை போன்று பிளாஸ்டிக்கிலான ராக்கெட் ஒன்றையும் கொண்டு வந்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →