திருநெல்வேலி

ஸ்கேட்டிங்: 180 மாணவர்கள் பங்கேற்பு

DIN


திருநெல்வேலியில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான 7 ஆவது ஸ்கேட்டிங் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை 180 மாணவர்கள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன், விவேகா கலாசார கல்வி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் 7 ஆவது தென்மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள், வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றன. இப்போட்டியை கே. தாணு தொடங்கி வைத்தார். அறக்கட்டளைத் தலைவர் ஆர். தாமஸ் தலைமை வகித்தார். ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் எஸ்.ஜெ. அழகேசராஜா முன்னிலை வகித்தார். இப்போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதியில் இருந்து 180 மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பிரான்சிஸ் சேவியர் சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர் ஜான் லாரன்ஸ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT