முகப்பு
திருநெல்வேலி

அகஸ்தியர் அருவிப் பகுதியில் வனத்துறையினர் தூய்மைப் பணி

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினரும், பாபநாசம் வனத்துறையினரும் இணைந்து அகஸ்தியர் அருவிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:57 AM
பகிர்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினரும், பாபநாசம் வனத்துறையினரும் இணைந்து அகஸ்தியர் அருவிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் அன்வர்தீன் உத்தரவின் பேரில், அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் பார்கவதேஜா ஆலோசனைப்படி இப்பணி நடைபெற்றது. 
பாபநாசம் வனச்சரகர் பரத் , கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் ஆகியோர் முன்னிலையில் பாபநாசம், கடையம் வனச்சரக வன ஊழியர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் உள்ளிட்டோர்  அகஸ்தியர் அருவிப் பகுதியில் குவிந்துகிடந்த குப்பைகள், பாலித்தீன், மரத்தடிகள் உள்ளிட்டவற்றை அகற்றினர்.  
தொடர்ந்து வனப்பகுதியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி மேற்கொள்வர்; அருவிப் பகுதி சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும் அருவியில் குளிக்க பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.