திருநெல்வேலி

விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு கெடுபிடி: இந்து முன்னணி புகார்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டைக்கு காவல் துறையினர் கெடுபிடி செய்வதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் திங்கள்கிழமை கூறியது: விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இம் மாதம் 13 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகளிலும், தெருக்களிலும், கோயில்களிலும் பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அவற்றை விசர்ஜனம் செய்வது பாரம்பரிய வழக்கமாகும்.
ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அரசும், காவல்துறையும் கடும் கெடுபிடியை கடைப்பிடிக்கின்றன.  இதைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் இம் மாதம் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம். தாமிரவருணி புஷ்கர விழா அரசு விழாவாக நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது நிர்வாகிகள் குற்றாலநாதன், வினோத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT