திருநெல்வேலி

மாவட்ட மைய நூலகத்தில் நூல் திறனாய்வு நிகழ்ச்சி

DIN

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட வாசகசாலை அமைப்பின் 16 ஆவது நூல் திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வாசக சாலை அமைப்பாளர் வில்பிரட் சி. துரை வரவேற்றார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் பேராசிரியர் அ.ராமசாமி, தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த் துறை முன்னாள் தலைவர் "மேலும்' சிவசு, பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் இந்து பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உலக எழுத்தாளர்கள் குறித்த கட்டுரை நூலான  "விழித்திருப்பவனின் இரவு' குறித்து சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கலைப்புல முதன்மையர் ச.மகாதேவன் சிறப்புரையாற்றினார். கலை இயக்குநர் கார்த்திகா நூல் குறித்த வாசகப் பார்வை வழங்கினார். வாசகசாலை அமைப்பாளரும், பண்பலை அறிவிப்பாளருமான செல்வா நன்றி கூறினார். நிகழ்வில் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT