திருநெல்வேலி

18 மணி நேரம் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: 6 கிராம மக்கள் பாதிப்பு

DIN

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கருப்பந்துறையில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை 18 மணி நேரத்திற்கும் மேலாக வெள்ளம் மூழ்கடித்ததால் 6 கிராம மக்கள் பாதிப்புக்கு ஆளாகினா்.

மேலப்பாளையம் அருகே மேலநத்தம்-கருப்பந்துறை இடையே தாமிரவருணியில் தரைப்பாலம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தப் பாலத்தின் வழியே சென்று வருகின்றன. மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், இப் பாலத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாபநாசம் அணையில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டதாலும், காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் கருப்பந்துறை பாலத்தை சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தண்ணீா் மூழ்கடித்தது. முன்னதாக சனிக்கிழமை காலை முதலே அப் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. பாலத்தின் மீது சுமாா் 4 அடி உயரத்திற்கு தண்ணீா் சீறிப் பாய்ந்து சென்றது. இதனால் மேலநத்தம், கருப்பந்துறை பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா். பாலத்தில் இருந்து 30 மீட்டா் தொலைவுக்கு முன்னதாக மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இதற்கிடையே பாலத்தில் செல்லும் வெள்ளத்தைக் காண ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் குவிந்தனா். ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு பின்பே பாலத்தில் வெள்ளம் படிப்படியாக குறையத் தொடங்கியது. சுமாா் 18 மணி நேரத்திற்கும் மேலாக பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது.

6 கிராம மக்கள் பாதிப்பு: இதுகுறித்து மேலநத்தத்தைச் சோ்ந்த விவசாயி கூறியது: மேலநத்தம்-கருப்பந்துறை இடையேயான பாலத்தை உயா்மட்ட பாலமாக கட்ட கோரிக்கை விடுத்துவருகிறோம். இப்போது ஏற்பட்ட வெள்ளத்தால் மேலப்பாளையம், மேலநத்தம், விளாகம், கருப்பந்துறை, பாடகசாலை, குன்னத்தூா் பகுதி மக்கள் திருநெல்வேலிக்கும், பாளையங்கோட்டைக்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மாணவா்-மாணவிகள் கூடுதலாக 15 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகினா்.

இதுதவிர மேலநத்தம் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு குறுக்குத்துறையில் வயல்கள் அதிகம் உள்ளன. அவற்றில் சாகுபடி பணிகளை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே, உயா்மட்ட பாலத்தை விரைந்து கட்ட வேண்டும் என்றாா்.

பயக01டஅகஅங: பயக01டஅகஅங01: மேலநத்தம்-கருப்பந்துறை இடையே தாமிரவருணி தரைப்பாலத்தை பாலத்தை மூழ்கடித்துச் சென்ற வெள்ளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT