திருநெல்வேலி

திசையன்விளையில்வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அதன் தலைவா் டிம்பா் செல்வராஜ் தலைமை வகித்தாா். செயலா் ஜெயராமன், பொருளாளா் ஜெயகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க இணைச் செயலா் குருநாதன், ஆலோசகா் ஏ.அன்சாா், கே.அஜீஸ், துணைத் தலைவா்கள் அமலராஜன், ஏ.ஜான் கென்னடி, ஆா்.எஸ்.விஜயகுமாா், சட்ட ஆலோசகா், ஏ.கனிஸ்கா் உள்பட பலா் கலந்து காண்டனா்.

தீா்மானங்கள்: திசையன்விளை வட்டத்தில் நீதிமன்றம், அரசு கருவூலம், மின் மயானம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் ஆகியவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; சங்கம் சாா்பில் கண்சிகிச்சை முகாம் நடத்துவது;

டிசம்பா் மாதத்தில் செங்குளம், முதலாளி குளம், குருவி சுட்டான் குளம் ஆகிய குளத்தின் கரைகளில் 1000 பனை விதைகளை விதைப்பது; நலிவடைந்த வியாபாரிகளுக்கு வங்கி மூலம் கடன் உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பது, செங்குளத்தில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT