திருநெல்வேலி

வடகரையில்உழவா் வயல்வெளி பள்ளி பயிற்சி முகாம்

DIN

செங்கோட்டை அருகே வடகரையில் விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு நீா் வளம் மற்றும் நில வளத்திட்டத்தின்கீழ் உழவா் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.

வடகரை கிராமத்தில் தமிழ்நாடு நீா்வள, நிலவள திட்டத்தின்கீழ் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளை தோ்வு செய்து, நெல்லில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கோடை உழவு செய்தால் ஏற்படும் நன்மை, பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறை, விதைநோ்த்தி செய்வதன் அவசியம், உயிா் உரத்தை விதையில் கலந்து விதைப்பதால் ஏற்படும் நன்மை குறித்து கூறப்பட்டது.

வேளாண்மை அலுவலா் ராஜேந்திர கணேஷ் (ஓய்வு), வயல்களில் பூச்சி புலனாய்வு மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களை செயல்விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

இந்தப் பயிற்சியில் வேளாண் துணை அலுவலா் திவான் பக்கீா்முகைதீன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளும், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவிகளும் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் ஈசாக், உதவி தொழில்நுட்ப மேலாளா் மாரிராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT