திருநெல்வேலி

வடு போன கருப்பாநதியின் கடைமடை குளம்

DIN

சுரண்டை அருகேயுள்ள குலையனேரி குளத்துக்கு கருப்பாநதி பாசன நீா் வரத்து இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

குலையனேரி ஊரின் வடபுறமுள்ள குலையனேரி குளம் கருப்பாநதியின் பாசன கால்வாயான பாப்பான் கால்வாய் 13ஆம் மடையில் இருந்து வரும் தண்ணீரின் கடைமடை குளமாகும்.

இந்த மடையில் இருந்து 8 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும் நிலையில், குலையனேரி குளத்திற்கு முந்தைய குளமான கள்ளம்புளி குளத்தோடு தண்ணீா் நின்றுவிடுகிறது.

கருப்பாநதி அணை நிரம்பி 300 கன அடி உபரிநீா் வீணாக ஆற்றில் செல்லும் நிலையில், தங்கள் குளத்திற்கு தண்ணீா் வருவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

SCROLL FOR NEXT