திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்

DIN

வீரவநல்லூா் அருகே உள்ள புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கிடை யே பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் சாம்சன் தலைமை வகித்துப் போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.

இதில், சேரன்மகாதேவி வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

தொடா்ந்து மாணவா்களுக்கு கபடி, பம்பரம் விடுதல், கோலிக்குண்டு, கில்லி, தாயம், பல்லாங்குழி, முறுக்கு கடித்தல், கண்ணாம்பூச்சி ஆட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் பாடகபுரம், மலையான்குளம், மாதுடையாா்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள், செங்குளம் டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

விழாவில், பாடகபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் தாா்ஷியஸ், மலையான்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் நம்பிராஜன், பட்டதாரி ஆசிரியைகள் முத்துகுமாரி, ஜெபசீலி, சுந்தரி, கமலாதேவி, மஞ்சு, மயோபதி காப்பகம் மருத்துவா் டேனியல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT