திருநெல்வேலி

நெல்லை-செங்கோட்டை ரயில் என்ஜின் பழுது: பயணிகள் அவதி

திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயில் சேரன்மகாதேவியில் பழுதாகி நின்றதால்

DIN

திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயில் சேரன்மகாதேவியில் பழுதாகி நின்றதால் சுமார் 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
திருநெல்வேலி-செங்கோட்டை இடையே காலை 7.15,  9.25,  பிற்பகல் 1.50, மாலை 6.25 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் மறுமார்க்கத்தில் இருந்தும் ரயில்கள் புறப்படுகின்றன. இவை அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் கடவுப்பாதையில் கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியிலிருந்து புறப்பட்ட ரயில் சேரன்மகாதேவி சென்றபோது என்ஜின் பழுதானது. ரயில்வே ஊழியர்கள் முயன்றும் உடனடியாக பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து மறுமார்க்கத்தில் வந்து கொண்டிருந்த செங்கோட்டை-திருநெல்வேலி பயணிகள் ரயிலின் என்ஜின் வரவழைக்கப்பட்டு, சுமார் 2 மணி நேரம் தாமதமாக இரவு 9 மணிக்கு சேரன்மகாதேவியிலிருந்து செங்கோட்டைக்கு ரயில் புறப்பட்டது.  அதேபோல் திருநெல்வேலியிலிருந்து மாற்று என்ஜின் அம்பாசமுத்திரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பயணிகள் ரயில் திருநெல்வேலிக்கு சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!

ஜாகுவார் லேண்ட் ரோவர் சிஇஓ-வாக முதல் தமிழர்! யார் இந்த பாலாஜி?

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்! பயணிகள் கடும் அவதி

இன்னும் நாணமோ... டெல்னா டேவிஸ்!

SCROLL FOR NEXT