திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி அருகே யானை அட்டகாசம்

DIN

கல்லிடைக்குறிச்சி அருகே விளை நிலங்களில் யானை புகுந்து அட்டகாசம் செய்ததில் நெற்பயிர்கள் சேதமடைந்தன.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55). இவர், மணிமுத்தாறு பிரதான கால்வாய்  பாசனத்தில் சீரான்குளம் பேவிளையிலுள்ள நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இப்பகுதியில் வியாழக்கிழமை இரவு புகுந்த ஒற்றை யானை வயலில் அட்டகாசம் செய்ததில் நெற்பயிர் சேதமடைந்து விவசாயிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனப்பணியாளர்கள் மலையடிவாரத்தில்  நடமாடி வரும் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில்  வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். 
யானைகள் மீண்டும் ஊருக்குள் வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். யானை அட்டகாசம் குறித்து பொட்டல், மலையான்குளம் பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT